கொள்ளை: கணவனுக்கு 8 ஆண்டு சிறை! நீதிமன்றத்தில் மனைவி கதறல்! 

சமூகம்
Typography

கோலாலம்பூர்,அக்.13- கடந்த ஆண்டு செந்தூலில் கொள்ளையில் ஈடுபட்ட தனது கணவருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் 8 ஆண்டு சிறைத் தண்டனையும் 2 பிரம்படியும் விதித்து தீர்ப்பளித்த போது குடும்பமாது ஒருவர் நீதிமன்றத்தில் கதறியழுதார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி செந்தூல் தாமான் செஜாத்திராவில் லீ சியோக் குவேன் என்ற பெண்ணின் கைப்பையை, இன்னும் தலைமறைவாக இருந்து வரும் மற்றொரு நபருடன் சேர்ந்து கொள்ளையடித்ததாக கார் பட்டறை மெக்கானிக்கான நோரிஷாம் சைபுல் என்ற நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

அவர் மற்றொரு கும்பலுடன் சேர்ந்து பெரிய அளவில் குற்றங்களைப் புரிந்ததற்கும் அவர் மீது குற்றம் பதிவாகியுள்ளது.

டிசம்பர் 1-ஆம் தேதி பாதுகாவலரான க.ரவீந்தர் என்பவரை  இரும்பு கம்பியால் தாக்கியதாக நோரிஷாம் மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நோரிஷாம்தான் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் தத்தெடுத்து வளர்க்கும் இரண்டு குழந்தைகள் ஆகியோரை மாதம் சம்பளம் 1,300 ரிங்கிட்டை வைத்துக் கொண்டு அவர்களை பராமரிக்க வேண்டும். அதனால், நீதிமன்றம் அவரது தண்டனையைக் குறைக்கவேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் எம்.மாதவன் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. இரண்டு குற்றங்களுக்கான தண்டனைகளும் இன்று முதல் தொடங்குகிறது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS