முறுக்கு, வடை, பால்கோவா, பாயாசம் தீபாவளிக்கு புதிய அஞ்சல்தலைகள்!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், அக்.13- தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இந்தியர்கள் விரும்பி, சமைத்து உண்ணும் உணவு வகைகளான வடை, முறுக்கு, பால்கோவா, பாயாசம், தோசை, இட்லி மற்றும் இந்தியர் இலை சாப்பாடுகளின் படங்களைக் கொண்ட அஞ்சல் தலைகளை போஸ் மலேசியா தனது நான்காவது பதிப்பில் வெளியிட்டுள்ளது. 

பால்கோவா அஞ்சல் தலைகள் 60 சென்னுக்கும், தோசை மற்றும் இட்லி அஞ்சல் தலைகள் 80 சென்னுக்கும், இந்தியர் இலை சாப்பாடு அஞ்சல் தலைகள் 90 சென்னுக்கும் விற்கப்படுகிறது, என்று போஸ் மலேசியா கூறியுள்ளது. 

இந்தியப் பாரம்பரிய உணவுகள் பல்வித வண்ணங்களிலும் பல்வித வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. இந்த உணவு வகைகளை தபால்தலைகளாக அச்சிடுவதன் வாயிலாக இந்தியர்களின் பண்டிகை உணர்வுகளை அதிகரிக்கக் கூடும் என்று தாங்கள் கருதுவதாக அந்நிறுவனம் கூறியது. 

அஞ்சல்தலைகள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளோர், அக்டோபர் 17-ஆம் தேதி முதற்கொண்டு இந்தத் தபால் தலைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அஞ்சல்தலை சேகரிப்பு, வணிகப் பிரிவுத் தலைவர் டியானா லீன் அப்துல்லா கூறினார். 

இதனிடையில், மற்ற இனத்தவருக்கும் பிடிக்கும் வகையில், ஓர் அடுக்கில் வைக்கப்பட்ட இனிப்பு வகைகளின் படங்கள் கொண்ட தபால்தலைகளும் வெளியீடு கண்டுள்ளதாகவும், அதன் விலை 5 ரிங்கிட் எனவும் அவர் சொன்னார். 

இதேப்போன்று, ஹரிராயா பெருநாள், சீனப் பெருநாள் மற்றும் கடாஷான் பெருநாளின் அவ்வினத்து மக்கள் விரும்பும் உணவு வகைகளையும், போஸ் மலேசியா அச்சிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS