தாதியிடம் தகாத செயல்; பிள்ளை ஷானுக்கு 7 மாதச் சிறைவாசம்! 3 பிரம்படி!

World
Typography

சிங்கப்பூர், அக்.13- புற்றுநோயில் வாடும் தனது மனைவிக்கு உதவ நியமிக்கப்பட்ட தாதி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட தொழிலதிபர் ஒருவருக்கு 7 மாதச் சிறைத் தண்டனை மற்றும் 3 பிரம்படித் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்தியாவைச் சேர்ந்த பிள்ளைஷாம் குமார் சதாசிவம் என்ற அந்த தொழிலதிபரின் செயல் தன்னை வெறுப்படையச் செய்வதாக மாவட்ட நீதிபதி மெத்தியு ஜோசப் கூறினார். 

"உடல்நலம் குன்றிய உங்களின் மனைவியைப் பார்த்துக் கொள்ள மட்டுமே அந்தத் தாதி நியமிக்கப்பட்டார். உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அல்ல. இது சிங்கப்பூர். இங்கு சில கட்டுபாடுகள் உள்ளன" என்று நீதிபதி அவரிடம் சுட்டிக்காட்டினார்.

துபாயில் இரும்பு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் பிள்ளை ஷாம், அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருந்தார். ஆனால், கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தமது குற்றத்தை ஒப்புக் கொள்வதாக அவர் நீதிமன்றத்திடம் தெரிவித்தார். 

தனது மனைவிக்கு சிகிச்சைப் பெறுவதற்காக பிள்ளைஷான் சிங்கப்பூருக்கு வந்திருந்தார். அந்தத் தாதி வேலைக்குச் சேர்க்கப்பட்ட மூன்று தினங்களில் அவருக்கு பாலியல் தொல்லைகளை இவர் தந்துள்ளார். 

தன் மனைவி தூங்கிக் கொண்டிருக்கையில், அந்தத் தாதியிடம் பேச்சுக் கொடுத்த பிள்ளை ஷான், தன்னிடம் முறைத் தவறி நடந்துக் கொண்டார் என்று போலீசில் அந்த 25 வயது தாதி புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். 

15 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிள்ளை ஷான், அக்டோபர் 16-ஆம் தேதி சிறைக்கு அனுப்பப்படுவார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS