ஆபாசம், விபசாரம்: இதுவரை 5,044 அகப்பக்கங்கள் முடக்கம்! -எம்சிஎம்சி 

சமூகம்
Typography

 

கோத்தா கினாபாலு, அக்.13- 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இன்று வரை, 5,044 அகப்பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது. 

1988-ஆம் ஆண்டின் மலேசியத் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கோட்பாடுகளை மீறியதற்காக அந்த 5,044 அகப்பங்கள் முடக்கப்பட்டுள்ளதாக சபா மாநில மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் நிர்வாக அதிகாரி டத்தோ சபாவி அகமட் கூறினார். 

முடக்கப்பட்ட அந்த அகப்பங்களில், 4,277 அகப்பங்கள் ஆபாச அகப் பக்கங்களாகும். விபச்சாரம், சூது, ஏமாற்று வேலைகளை விளம்பரப்படுத்தும் அகப் பக்கங்களும் சட்டவிரோதமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் அகப் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.  

இன்றைய காலக்கட்டத்தில், தொழில்நுட்பம், சமூகப் பிரச்சினைகளை உருவாக்குவதாக அவர் கருத்து தெரிவித்தார். இளைய சமூகத்தினர் பலர் இந்த தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துவதாக  சிபித்தாங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சபாவி சொன்னார். 

15 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்ட 77 விழுக்காட்டினர் இணையத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரம் தெரிவிப்பதாக அவர் கூறினார். 

இதனிடையில், மலேசிய சமூக வலைத்தளங்களில் பல பொய்யான தகவல்களும் பகிரப்படுவதாகவும், அவற்றின் வாயிலாக பலருக்கு அவமானங்கள் ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் கூறினார். 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS