மீன்விலை உயர்வைத் தடுக்க அமைச்சு தீவிர சோதனை!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர்,அக்.13- உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சகம் (KPDNKK), கெம்போங் மீன் விலையைக் கட்டுப்படுத்தும் சாத்தியக்கூறு பற்றி நிதி அமைச்சிடம் பேசவுள்ளது.

மீன்களின் விலை நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டு போவதுடன் அதன் விலை ஒரு நிலைப்பாட்டில் இல்லை. தட்பவெட்ப நிலைக்கேற்ப அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

மலை பெய்தால் மீன்களின் விலை அதிகளவில் இருக்கிறது என உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சகத்தின் நிர்வாகி டத்தோ முகமட் ரொஸ்லான் மஹயுடின் கூறினார்.

வியாபாரிகள் மழைக் காலங்களில் கொள்ளை லாபம் அடிக்க மீன்களின் விலையை அதிகமாக்குகின்றனர். இதனை நிதி அமைச்சு கண்காணிக்க வேண்டும் என ரொஸ்லான் சொன்னார்.

பொதுமக்கள் அதிக விலைப் போட்டு விற்கும் வர்த்தகர்களைப் பற்றி அமைச்சிடம் விவேக கைப்பேசி விண்ணப்பம் (ஆப்ஸ்) ‘Ez ADU’ அல்லது 03-8826088 என்ற எண்களுக்கு அழைத்து புகார் செய்யலாம்.

அவர்கள் விலைக் கட்டுப்பாடு மற்றும் 2011-ஆம் ஆண்டு கொள்ளை லாபத் தடுப்புச் சட்டம் மூலம் குறைந்தபட்சம் 100,000 ரிங்கிட் அபராதமும் 3 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என ரொஸ்லான் சொன்னார்.

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் மீது நிர்ணயிக்கப்பட்ட விலைக் குறிப்பை ஒட்டாதவர்களுக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS