பினாங்கில் மண்சரிவு: இருவர் பலி! எஞ்சிய 12 பேரின் கதியென்ன?

சமூகம்
Typography

 

பினாங்கு, அக்.21- இங்குள்ள தஞ்சோங் பூங்கா கட்டுமானப் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட குன்று பகுதியில் இருந்து ஆயிரக் கணக்கணக்கான டன் மண் சரிந்து விழுந்து விழுந்ததில் 14 பேர் அதில் புதையுண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் இருவரின் உடல் மட்டும் இப்போதைக்கு மீட்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை பினாங்கு மாநகராண்மைக் கழகத்தின் மேயர் டத்தோ மைமுனா முகமட் ஷரிப் உறுதிப்படுத்தினார். ஒரு மணிநேர இடைவெளியிலடந்த இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார். 

இந்த மண் சரிவுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், கடந்த சில தினங்களாக பினாங்கில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை ஈரம் மிகுந்த சூழல் காரணமாக அமைந்திருக்கலாம் என்று அவர் சொன்னார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS