எம்.ஏ.சி.சி தலைவரை இடைநீக்கம்:  நாடாளுமன்றத்தில் பிரேரணை

சமூகம்
Typography

 ஜோர்ஜ்டவுன், அக்.21- ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஜூல்கிப்ளியை பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இங் வெய் அய்க் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 

ஜூல்கிப்ளியின் மீது மேற்கொள்ளப்படும் போலீஸ் விசாரணைகளில் எவ்வித தடைகளும் இன்றி நடைபெறும் பொருட்டு, இந்த இடைக்கால நீக்கம் அவசியம் என்று இங் தெரிவித்தார். 

அடுத்த வாரம் வரும் பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பு இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 

ஜூல்கிப்ளி, திருமணமாகிய பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார். 

அவரைப் போன்று தோற்றம் கொண்ட நபர் ஒருவர், இந்தோனிசியாவின் பாலி நகரத்தில் திருமணம் ஆகிய பெண் ஒருவருடன் சுற்றுலா மேற்கொண்டுள்ள படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் சில தினங்களுக்கு முன்பு பரவியது.

குற்றவியல் சட்டத்தின் 498-ஆவது பிரிவின் கீழ் டைது குறித்து  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS