பினாங்கு மண்சரிவு: அறுவரின் உடல்கள் மீட்பு!

சமூகம்
Typography

ஜோர்ஜ் டவுன்,அக்.22- இங்குள்ள தஞ்சோங் பூங்கா கட்டுமானப் பகுதியில் நடந்த மண் சரிவில் சிக்கிய அறுவரின் உடல்கள் இன்று நண்பகல் வரை மீட்கப்பட்டுள்ளன. 

அந்த அறுவரும் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் 8 பேரின் உடல்கள் 35 மீட்டர் பூமிக்குக் கீழ் புதையுண்டு இருப்பதாக நம்பப்படுகின்றது.

ஒரு மலேசியர் உட்பட 8 வங்காள தேசத்தவர்கள், 2 மியன்மார் பிரஜைகள், 2 இந்தோனிசியர்கள், ஒரு பாகிஸ்தானியர் ஆகியோர் நேற்று இந்த மண்சரிவில் புதையுண்டதாக தெரிகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS