'எம்.ஏ.சி.சி. அதிகாரியின் கள்ளத்தொடர்பு வீடியோ: விசாரணை நிலை என்ன?' - எம்.பி. கேள்வி

சமூகம்
Typography

கோலாலம்பூர், அக்.22- எம்.ஏ.சி.சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரான டான்ஶ்ரீ ஷுல்கிப்ளி அகமட், திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் பரவலானது குறித்து மேற்கொண்ட விசாரணையின் ஆகக் கடைசியான நிலவரம் பற்றி போலீசார் விளக்கம் அளிக்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ விவகாரத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினரா? என மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ புஷி ஹருண் விளக்கவேண்டும். 

மேற்கண்டவாறு பூச்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெகவின் சட்டப் பிரிவுத் தலைவருமான கோபிந்த் சிங் கேட்டுக்கொண்டார்.

இது மிக முக்கியமான அம்சமாகும். காலதாமதமின்றி போலீசார் நடவடிக்கையில் இறங்கவேண்டும். உண்மைநிலை என்ன என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

திருமணமான ஒரு பெண்ணுடன் பாலித்தீவில் விடுமுறையைக் களிப்பதில் சம்பந்தப்பட்ட அவர் ஈடுபட்டதாக சித்தரிக்கிறது அந்த வீடியோ. 

இந்நிலையில் அது குறித்த உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறி, இந்தப் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு காணக்கூடியவராக இருப்பவர் டான்ஶ்ரீ ஷுல்கிப்ளி மட்டுமே என்று கோபிந்த் சிங் சுட்டிக்காட்டினார்.

அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்தார்களா? என்பது குறித்து அவரே விளக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS