காப்பிக் கடையில் துப்பாக்கிச் சூடு; ஐந்து ஆசாமிகள் பிடிபட்டனர்

சமூகம்
Typography

 

ஜொகூர்பாரு, அக்.23- கடந்த வெள்ளிக்கிழமையன்று, தங்காக், பெக்கான் புக்கிட் கம்பீரிலுள்ள காப்பிக் கடை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் தொடர்பில், ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதிகாலை 4 மணிக்கு நடந்த அச்சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர். முகமூடி அணிந்த ஆடவன் ஒருவன் அவ்விருவரையும் மிக அருகிலிருந்து ஏழு முறை சுட்டான்.  

அச்சம்பவம் தொடர்பில் 30 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜொகூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் காலீல் காதீர் கூறினார். 

"இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு போதைப் பொருள் பின்னணியாக இருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்" என்று அவர் சொன்னார். 

கைது செய்யப்பட்ட அந்த ஐவரும் அக்டோபர் 27-ஆம் தேதி வரை காவலில் வைக்கப்படுவர். 1971-ஆம் ஆண்டின் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல் சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது. 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS