ரொம்பின் விபத்து: லோரி ஓட்டுனர் சிவகுமாருக்கு கடும் தீக்காயம்!

சமூகம்
Typography

 

ரொம்பின், நவ.24- குவாந்தான்–சிரம்பான் சாலையின் 140.8 கிலோமீட்டர் அருகில் செம்பனை எண்ணெயை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று சாலையோரத்தில் கட்டுப்பாட்டை இழந்து வெடித்ததில், அந்த லோரி ஓட்டுநரான எம்.சிவகுமார் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகினார். 

அதிகாலை 1.30 மணியளவில், சிரம்பானுக்கு செம்பனை எண்ணெயை ஏற்றிச் சென்ற 44 வயதான சிவகுமார், தனது லோரியை கட்டுப்படுத்த முடியாததால் அந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

"அந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து, மலையின் விளிம்பை நோக்கிச் சென்றதால், அதிலிருந்த செம்பனை எண்ணெய் சாலை முழுவதும் சிந்தியது" என்று ரொம்பின் வட்டாரப் போலீஸ் தலைவர் துணை சூப்ரிண்ட். அஸ்லி முகமட் நோர் கூறினார். 

அந்த லோரியில் தீப்பிடிக்கும் போது, சிவகுமார் தனது இறுக்கையில் மாட்டிக் கொண்டார். அச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அவரைக் காப்பாற்றினர் என்று அஸ்லி தெரிவித்தார். 

காப்பற்றப்பட்ட அவர், உடனடியாக முவாட்ஸாம் ஷா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அதன் பின்னர், தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமைக்கு அனுப்பப்பட்டார் என்றும் அவர் கூறினார். அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS