ரிம.150,000 பண மூட்டைகளுடன்  கொள்ளையர்கள் தப்பியோட்டம்!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், நவ.24- வங்கிகளுக்கு பணத்தை ஏற்றிச் செல்லும் வேனைக் கொள்ளையடித்து 150,000 ரிங்கிட் பண மூட்டைகளுடன் இரு திருடர்கள், மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். 

ஶ்ரீ செர்டாங் என்ற பகுதியுள்ள வங்கிக் கிளை ஒன்றின் முன், இன்று காலை மணி 10.30 அளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. 

அந்த வங்கியின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்ட வேனிலிருந்த மூன்று பண மூட்டைகளை, தலைக்கவசம் அணிந்திருந்த இருவர் லாவகமாக தூக்கிக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர் என்று செர்டாங் ஓசிபிடி துணை ஆணையர் மெகாட் முகமட் அமீனுடின் தெரிவித்தார். 

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில், அந்த வங்கியைச் சேர்ந்த நான்கு பாதுகாவலர்களை விசாரணைக்காக போலீசார் கைது செய்துள்ளதாக மெகாட் முகமட் கூறினார். மேலும், அருகிலுள்ள சிசிடிவி காமிராக்களையும் அவர்கள் சோதனை செய்து வருவதாக அவர் சொன்னார். 

இச்சம்பவத்தில், குறைந்த பட்சம் 150,000 ரிங்கிட் கொள்ளையடிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 395-ஆவது பிரிவின் கீழ், இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது. 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS