கிரேப் காரில் தூங்கிய மாணவி மானபங்கம்! ஓட்டுநருக்கு 16 மாதம் சிறை!

சமூகம்
Typography

 

சிங்கப்பூர், நவ.24- 'கிரேப்' காரில் பயணித்த பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 64 வயது கிரேப் கார் ஓட்டுநரான இங் செங் சீ என்ற நபருக்கு 16 மாதச் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது. 

அந்தக் காரில் தன்னையறியாது தூங்கிய 21 வயது கல்லூரி மாணவி மானபங்கம் செய்ய முயன்ற அந்தக் கார் ஓட்டுநரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரூதி போப்பனா கூறினார். 

கல்லூரியில் நீண்ட நேரம் படிப்பில் நேரத்தை செலவிட்ட, பின்னர் காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டதால், களைப்பு அடைந்தார். பின்னர் அந்தப் பெண் பீர் அருந்தினார். 

அதன் பின்னர், 20 நிமிட தூரத்தில் இருக்கும் தனது வீட்டில் தன்னை இறக்கிவிடுமாறு கிரேப் கார் ஓட்டுனரான இங்-கிடம் கூறிவிட்டு, அசதியினால் அவர் அந்தக் காரிலேயே தூங்கி விட்டார். 

சுமார் 90 நிமிடங்கள் கழித்து யாரோ தன்னை உரசுவது அறிந்து திடுக்கிட்டு எழுந்த போது, அந்தக் கார் ஓட்டுநர் தம்மீது சாய்ந்துக் கொண்டு, தகாத முறையில் நடந்துக் கொண்டிருந்ததாக அந்த மாணவி நீதிமன்றத்தில் அழுதுக் கொண்டே கூறினார். 

அதிர்ச்சியுடன் விழித்தெழுந்தஅந்த மாணவி, அந்த ஓட்டுனருடன் 20 சிங்கப்பூர் டாலரை கொடுத்து விட்டு, தனது உடைமைகளைக் கூட எடுக்காமல், அங்கிருந்து தாம் வீட்டினுள் ஓடி விட்டதாக அவர் தெரிவித்தார். 

தனக்கு நடந்தது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தப் பின்னர், அவர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். 

அந்த மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகும் வண்ணம் நடந்துக் கொண்ட இங்கை எச்சரித்த நீதிபதி லூக் டான், 16 மாதம் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS