16 வயது மாணவியைக் கற்பழித்த காவலாளிக்கு 12 ஆண்டுகள் சிறை

சமூகம்
Typography

புத்ராஜெயா, டிச.6- முகநூல் மூலம் அறிமுகமான பதின்ம வயது பள்ளி மாணவியை தங்கும் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கற்பழித்த பாதுகாவலாளி ஒருவனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு 2 பிரம்படித் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சாத்தா நாசில் இப்ராகிம் (வயது 39) என்ற அந்தக் காவலாளி, செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி யோங் ஷரிதா சஷாலி முன்னிலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

சுமார் 16 வயதுடைய அந்த மாணவி முகநூல் மூலம் அந்தக் காவலாளிக்கு அறிமுகமாகி உள்ளான். கிள்ளானில் தன்னுடைய வீட்டிற்கு அருகிலுள்ள பஸ் நிலையத்தில் பின்னர் ஒருநாள் அந்த மாணவியைச் சந்தித்துப் பேசிய பின்னர் அவரை அழைத்துக் கொண்டு கோலாலம்பூரிலுள்ள பேரங்காடி ஒன்றுக்கு வந்துள்ளான்.

பின்னர் ஜாலான் புடுவிலுள்ள தங்கும் விடுதி ஒன்றுக்கு அந்தச் சிறுமியை அழைத்துச் சென்ற அவன், சிறுமியின் ஆடைகளைக் களைந்த போது கடுமையாக எதிர்க்கவே,  சிறுமியை அடித்து பயமுறுத்திய பின்னர் கற்பழித்துள்ளான். பின்னர் மீண்டும் கிள்ளானிலுள்ள அதே பஸ் நிலையத்தில் சிறுமியை விட்டு விட்டுச் சென்று விட்டான் என்று நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS