இவ்வார பெட்ரோல் விலை: 1 காசு குறைந்தது! 

சமூகம்
Typography

கோலாலம்பூர், டிச.6- இவ்வாரத்திற்கான புதிய பெட்ரோல் விலை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரோன்-95 மற்றும் ரோன்-97 ஆகிய ரகப் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 1 காசு குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், டீசலின் விலை லிட்டருக்கு 4 காசுகள் குறைக்கப்பட்டு 2 ரிங்கிட் 21 காசுகளாக விற்கப்படும். ரோன்-95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 29 காசுகளாக விற்கப்படும். 

ரோன்-97 ரகப் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 57 காசுகளாக விற்கப்படும். இந்த புதிய எரிபொருள் விலை நிலவரம், இன்று நள்ளிரவு தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். 

BLOG COMMENTS POWERED BY DISQUS