மூன்று வாகனங்கள் மோதல்: 14 பேர் படுகாயம்! 

சமூகம்
Typography

கோப்பெங், டிச.6- வடக்கு-தெற்கு விரைவு நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்டதில், 14 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் 12 பேர், அந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த பயணிகளாவர். 

காகிதங்களை ஏற்றிச் செல்லும் ட்ரெய்லர் ஒன்றின் பின்புறத்தில், இரண்டு மாடி பேருந்து வேகமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் படை பேச்சாளர் தெரிவித்தார். 

அதே சமயம், அந்தப் பேருந்தின் அருகில் பயணித்துக் கொண்டிருந்த லோரி ஓட்டுநர் ஒருவரால், உடனடியாக 'ப்ரேக்' போட இயலாமல், லோரியின் கட்டுப்பாட்டை இழந்து, அந்த பேருந்தின் ஓரத்தில் மோதி விட்டார் என்று அந்தப் பேச்சாளர் கூறினார். 

"இச்சம்பவம் தொடர்பில், அதிகாலை 5.40 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து, மீட்புப் படை வீரர்கள் அங்கு விரைந்தனர். விபத்தில் சிக்குண்டு பேருந்திலிருந்து வெளியேற முடியாமல், 3 ஆண்களும், 9 பெண்களும் மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. 

அந்தப் பேருந்து ஓட்டுநர், இடிபாடுகளிலிருந்து சொந்தமாக வெளியேறி விட்டார்" என்று அவர் மேலும் கூறினார். 

இவ்விபத்தில் காயமடைந்த அனைவரும் ஈப்போவிலுள்ள ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

காகிதங்களை ஏற்றி வந்த ட்ரெய்லர் ஓட்டுநரை மீட்புப் படை வீர்ர்கள் அவரின் ட்ரெய்லரிலிருந்து வெளியேற்றியதாகவும், அவருடன் பயணித்து இருவர், எவ்வித காயமும் இன்றி தப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS