லட்சுமி கொலையில் புதிய திருப்பம்! காதலனும் மனைவியும் கைது!

சமூகம்
Typography

 கம்பார், டிச.7- மம்பாங் தியாவாங் என்ற பகுதியிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் கொலையுண்டு கிடந்த லட்சுமி கொலையில் சில புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.  

அந்த 28 வயது இளம் பெண் கொலை தொடர்பில் அவரது காதலனும் அவனின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், அந்தப் பெண், இதர இரு ஆடவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தார் என்றும், அந்த உறவு வைத்துக் கொள்வதற்கு அவ்விருவரிடமிருந்தும் அவர் பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்திருப்பதாக போலீஸ் தரப்பு கூறியது. 

இதன் தொடர்பில், கடந்த 3-ஆம் தேதியன்று, அவ்வட்டார காவல் நிலையத்தில் 54 வயது ஆடவர் ஒருவர் சரணடைந்துள்ளார். மேலும் 45 வயது மீன் விற்பனையாளர் ஒருவரையும், தாமான் அமானிலுள்ள வீடு ஒன்றில், விசாரணைக்கு உதவும் பொருட்டு, போலீசார் கைது செய்துள்ளதாக ஓசிபிடி சூப்ரிண்ட். இங் கொங் சூன் கூறினார்.  

கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதியன்று, காளான்களை பறிக்கச் சென்ற முதியவர் ஒருவர், செம்பனைத் தோட்டத்தில் கொலையுண்டு கிடந்த லட்சுமியின் உடலைக் கண்டார்.  

உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு, தலைப் பகுதியில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு லட்சுமி இறந்துக் கிடந்தார். தலைப் பகுதியில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் தான் அவர் மரணமடைந்து உள்ளார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது. 

"பழி வாங்கும் நோக்கத்தில் லட்சுமி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் இறந்துக் கிடந்த இடத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள புதர்களில், லட்சுமியின் உடமைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன" என்று இங் கொங் சூன் சொன்னார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS