நெடுஞ்சாலையில் இரட்டை மாடி பஸ்- டிரெய்லர் லோரி மோதல்! அறுவர் காயம்! 

சமூகம்
Typography

 கோலக் கங்சார், டிச.7- வடக்கு-தெற்கு விரைவு நெடுஞ்சாலையின் 246 ஆவது கிலோமீட்டரில் இரட்டை மாடி விரைவு பேருந்து ஒன்று டிரெய்லர் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அறுவர் காயம் அடைந்துள்ளனர். 

சுங்கை பேராக் ஓய்வு இடத்திலிருந்து வெளியேறிய பேருந்தின் ஓட்டுனர், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 டன்கள் எடைகொண்ட டிரெய்லரைக் கவனிக்கத் தவறி, அதன் மீது மோதியதால் அவ்விபத்து நடந்தது. 

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.40-க்கு நிகழ்ந்தது. கங்கார், பெர்லிசிலிருந்து கிள்ளானை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அப்பேருந்தில் 42 பயணிகள், மற்றும் 2 ஓட்டுனர்கள் பயணித்தனர் என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் படை பேச்சாளர் ஒருவர் தகவல் தெரிவித்தார். 

பேருந்தில் காயத்திற்கு உள்ளாகி சிக்கிக் கொண்ட ஐவரையும், அந்தப் பேருந்து ஓட்டுநரையும், அவர்களின் இருக்கையிலிருந்து வெளியேற்ற பொதுமக்கள் உதவியுனர். அவர்கள் அனைவரும் ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப் பட்டனர் என்று அவர் மேலும் கூறினார். 

இதனிடையில், அப்பேருந்தில் பயணித்த கண் பார்வையற்ற ஒருவர், அவ்விபத்தில் காயப்படாத போதிலும், பேருந்திலிருந்து வெளியேற முடியா மல் தவித்ததாகவும் அவர் சொன்னார். 

"ஏணியின் உதவிக் கொண்டு, அவரை அப்பேருந்திலிருந்து நாங்கள் வெளியேற்றினோம்" என்றார் அவர். இவ்விபத்தில், அந்த டிரெய்லர் ஓட்டுனருக்கும், அவரின் இணை ஓட்டுனருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS