மனைவியின் சகோதரி குளிப்பதை வீடியோ எடுத்த மலேசியருக்கு சிறை! 

சமூகம்
Typography

சிங்கப்பூர், டிச.7- தனது மனைவியின் சகோதரி குளிக்கும் காட்சிகளைப் வீடியோ எடுத்து, அதை அவரிடமே போட்டுக் காண்பித்து, பின்னர் அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய 26 வயது ஆடவனுக்கு 30 மாதச் சிறை மற்றும் மூன்று பிரம்படிகளைத் தண்டனையை விதித்து  நீதிபதி ஹமீடா இப்ராஹிம் விதித்தார். 

மாடல் அழகியான தனது மனைவியின் அக்காள் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால், சிறிய காமிரா ஒன்றினை குளியல் அறையினுள் பொருத்தி விட்டு, அந்த 30 வயது பெண் குளிக்கும் காட்சிகளை சமையல் கலைஞரான அந்த ஆடவன் பதிவு செய்து வைத்திருந்தான். 

அந்தக் காமிராக்களிலிருந்து இரண்டு வீடியோக்களை தனது கைத்தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்த அவன், அதனை அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது, அவளிடன் காண்பித்தான். 

அந்த வீடியோக்களை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளான அந்தப் பெண், "என் அறையை விட்டு வெளியே போ" என்று அவனிடம் கோபமாகக் கூறிய போதும், அதைச் சட்டை செய்யாமல், அவரை அந்த ஆடவன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயற்சித்தான். 

அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, குளியல் அறைக்குள் சென்று கதவினை பூட்டிக் கொண்ட அந்தப் பெண், அதன் பின்னர், தனது சகோதரரை தொடர்புக் கொண்டு, தனக்கு ஏற்பட்ட அவலம் குறித்து தகவல் தெரிவித்தார். 

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தச் சகோதரர், போலீசில் இது குறித்து புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச்சு மாதம் 13-ஆம் தேதி அந்த ஆடவன் கைது செய்யப்பட்டான். 

குற்றஞ்சாட்டப்பட்ட தனது கட்சிக்காரர் தனது தவறை உணர்ந்து வருந்தி மன்னிப்பு கோருவதாக அவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டெஸ்மண்ட் டான் கூறினார்.  

இச்சம்பவத்தினால், அந்த ஆடவனின் மண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் எழுந்துள்ளதாகவும், அவன் தனது 3 வயது குழந்தை அவன் கண்ணெதிரில் வளர்வதைக் காண முடியாத நிலைக்கு அவன் தள்ளப்பட்டுள்ளான் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், இச்சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது, அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, போலீசாருக்கு அவன் உதவியதாகவும் அவர் கூறினார். 

இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS