'ஒன் பிளான்' சந்தாதாரர்களுக்கு மெக்ஸிஸ் கூடுதலாக 10-ஜிபி வழங்குகிறது!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், டிச.6- மெக்ஸிஸ் 'ஒன் பிளான்' (MaxisOne Plan) கீழ் செயல்படும் நான்கு பிளான்களின் போஸ்ட் பெய்டு (Postpaid) சந்தாதாரர்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு மெக்ஸிஸ் தரும் இணையச் சேவையில் கூடுதல் 10ஜிபி (GB) சேவை வழங்கப்படும்.  

மெக்ஸிஸ் ஒன் பிளான் 98-க்கு (MaxisOne Plan 98) இனிமேற்கொண்டு மெக்ஸிஸ் 30ஜிபி இணையச் சேவையை வழங்கும். அந்த 30ஜிபியை, 15ஜிபி வார நாட்களுக்கும், மேலும் 15ஜிபியை வார இறுதிக்கும் சந்தாரர்கள் உபயோகப்படுத்தலாம். 

இந்தப் பிளானை உபயோகிக்கும் சந்தாதாரர்கள் தங்களின் விருப்பதிற்கேற்ப, 10 வெள்ளி அதிகமாகச் செலுத்தி, அந்த 30ஜிபியை, வார நாட்கள் அல்லது வார இறுதி என்று பிரிக்காமல், ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் உபயோகிக்கலாம்.  

மாதம் ஒன்றுக்கு 128 ரிங்கிட், 158 ரிங்கிட் மற்றும் 188 ரிங்கிட்டை போஸ்ட்பெய்டு கட்டணமாகச் செலுத்தி வந்த சந்தாதாரர்களுக்கு, இனிமேற்கொண்டு வார நாட்கள், வார இறுதி என்ற அடிப்படையில் இணைய சேவை பிரித்து வழங்கப்படாது. 

ஒரு மாதத்திற்கு 40ஜிபி (MaxisOne Plan 128), 50ஜிபி(MaxisOne Plan 158) மற்றும் 60ஜிபி(MaxisOne Plan 188) என்ற வகையில், அவர்கள் தங்களின் கைத்தொலைபேசிகளில் இணையச் சேவைகளை பெற்று மகிழலாம். 

முன்பைப் போலவே, அவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இலவசமாக தொலைபேசி தொடர்பை பயன்படுத்தலாம், குறுஞ்செய்தி அனுப்புவது உட்பட.  மேல் விவரங்களுக்கு இதை "கிளிக்" செய்யவும். 

http://www.maxis.com.my/en/personal/plans/postpaid-plans/maxisone.html

 

BLOG COMMENTS POWERED BY DISQUS