தலைக்கு மேலே மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய இளம்மாது!

சமூகம்
Typography

 

சிபு, டிச.7- இங்கு ஜாலான் துன் அகமட் ஸாய்டி என்ற இடத்திலுள்ள தனது வீட்டின் கழிவறைக்குச் சென்றமிளம் மாது ஒருவர், அந்தக் கழிவறையின் மேற்கூரையில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருப்பதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். 

கிட்டத்தட்ட ஐந்து அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை, அவர் காலை மணி 7.30-க்கு கண்டதாக பொதுப் பாதுகாப்புப் படை அதிகாரி புஜாங் கெட்ரி கூறினார். 

தன் வீட்டு கழிப்பறையின் மேற்கூரையில் படுத்துக் கொண்டிருக்கும் மலைப்பாம்பை அகற்றுமாறு அவர் பொதுப் பாதுகாப்புப் படைக்கு அழைப்பு விடுத்ததாக புஜாங் மேலும் கூறினார். 

அதனைத் தொடர்ந்து, அந்தப் பாம்பை அவர்கள் பிடித்து தங்களின் அலுவலகத்திற்கு கொண்டு வந்ததாக அவர் சொன்னார். அந்த வீட்டின் அருகிலிருந்த கால்வாயின் வழியாக அந்த மலைப்பாம்பு, அந்த வீட்டினுள் புகுந்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS