கடலில் நீந்தி சிங்கைக்குள் நுழைய முயன்ற 3 வெளிநாட்டவர்கள் கைது!

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், டிசம்.11- மலேசியாவிலிருந்து நள்ளிரவில் கடலைக் நீந்திக் கடந்து கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மூன்று நபர்களும் கடலில் நீந்தி சிங்கப்பூருக்குள் நுழைவதை சிங்கப்பூர் கடலோர காவல் படையினர் கண்காணிக்கத் தொடங்கினர்.

பின்னர் 20 நிமிடங்கள் கழித்து அவர்களை வழிமறித்து காவல் படையினர் கைது செய்தனர் இவர்கள் 22 வயதுக்கும் 29 வயதுக்கும் உப்பட்டவர்கள். எனினும், இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது வெளியிடப்படவில்லை.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தது தொடர்பாக இவர்கள் மீது சுமத்தப்படவிருக்கும் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், இவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தது 3 பிரம்படியும் விதிக்கச் சட்டம் வகை செய்கிறது.

சிங்கப்பூரிலிருந்தோ அல்லது மலேசியாவிலிருந்தோ இவ்வாறு கடலில் நீந்தி மற்றொரு பகுதிக்குச் செல்ல வெளிநாட்டவர்கள் சிலர் முயற்சிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS