சிலாங்கூரின் அரச விருதுகளை துன் மகாதீர் திருப்பித் தந்தார்! 

சமூகம்
Typography

 கோலாலம்பூர், டிச.11- புகீஸ் வம்சாவளியினர் குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைத்தது குறித்து சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரீஸ் ஷா கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிலாங்கூர் அரண்மனையால் வழங்கப்பட்ட இரு அரச விருதுகளை துன் மகாதீர் திரும்ப ஒப்படைத்தார். 

1973 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில், அப்போதைய சிலாங்கூர் சுல்தானால் மகாதீருக்கு அவ்விரு விருதுகளும் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்று, எஸ்.பி.எம்.எஸ் எனப்படும் "Darjah Kebesaran Seri Paduka Mahkota Selangor" உயரிய விருதாகும். 

அவ்விரு விருதுகளையும், சிலாங்கூர் அரண்மனைக்கு பிரிபூமி கட்சியின் தேசிய தலைவரான தலைவரான மகாதீர், கடந்த வியாழக்கிழமையன்று திருப்பி அனுப்பி விட்டதாக அக்கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரான டத்தோ டாக்டர் ராயீஸ் ஹுசீன் வாட்ஸாப்-பில் தெரிவித்தார். 

மகாதீரின் அந்த முடிவுக்கு காரணம் என்ன? என்று வினவிய போது "அதற்கான காரணம் தெளிவாக உள்ளது" என்று அவர் பதிலளித்தார். 

ஷா ஆலாமிலுள்ள புக்கிட் காயாங்கான் அரண்மனையில், சிலாங்கூர் சுல்தானின் மூத்த அதிகாரியிடம் அவ்விரு விருதுகளும் கொடுக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. 

கடந்த அக்டோபர் மாத்த்தில், 'புகீஸ்' சமூகத்தினரை கடற்கொள்ளையர்களோடு மகாதீர் ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுவொரு தேச நிந்தனைக் குற்றம் என்றும் மகாதீரின் அச்செயல் கண்டிக்கத்தக்கது என்று சிலாங்கூர் சுல்தான் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS