விஜய் டிவி சூப்பர் சிங்கர்: மலேசியாவுக்கு பெருமை சேர்ப்பேன்! -அஞ்சலி (VIDEO)

சமூகம்
Typography

 கோலாலம்பூர், டிசம்.11- தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியான விஜய் டி.வி.யில் இடம்பெறும் 'சூப்பர் சிங்கர்' பாடல் போட்டிக்கான தேர்வில் மலேசியாவைச் சேர்ந்த அஞ்சலி கதிரவன் வெற்றி பெற்று மலேசியர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பயின்றுவரும் அஞ்சலி தந்தையார் கதிரவன், மலேசியாவில் நன்கு அறிமுகமான பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்திங், தெலுக் பங்குளி லிமா கராங்கைச் சேர்ந்த 22 வயதுடைய அஞ்சலி சிறுவயது வயது முதலே இசைத்துறையில் ஈடுட்பாடு கொண்டவர். 

தம்முடைய சூப்பர் சிங்கர் போட்டித் தேர்வு குறித்து 'வணக்கம் மலேசியா'விடம் கருத்துரைத்த போது "இதுதான் தொடக்கம். இனிமேல் இன்னும் பல கட்டங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. இருந்தாலும் எனக்கு இது மகிழ்ச்சி அளித்துள்ளது" என்று அஞ்சலி சொன்னார்.

"தேர்வுச் சுற்றின் போது சில பாடல்களைப் பாடினேன். அந்தப் பாடல்களை அடிப்படையாக வைத்து இந்தத் தேர்வில் வென்றுள்ளேன். தொடர்ந்து மேலும் சிறப்பாக முன்னேறி மலேசியர்களுக்கு பெருமைச் சேர்க்க வேண்டும் என்னுடைய ஆசை" என்று அவர் சொன்னார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS