சிறந்த மலிவுவிலை விமான சேவை; ஏர் ஆசியாவிற்கு 5வது முறையாக விருது!

சமூகம்
Typography

கோலாலம்பூர், டிச.11- நேற்று வியட்னாமின் ஃபூ குவோக் நகரத்தில் நடத்தப்பட்ட 2017-ஆம் ஆண்டிற்கான உலகச் சுற்றுலா விருது நிகழ்ச்சியில், உலகின் தலைசிறந்த மலிவுவிலை விமானச் சேவையை வழங்கும் விமான நிறுவனமாக ஏர் ஆசியா விமான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

இந்த விருதினை, தொடர்ந்து ஐந்து வருடங்களாக ஏர் ஆசியா நிறுவனம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் பல நாடுகளுக்கு ஏர் ஆசியாவின் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஏகோபித்த வாக்குகளைப் பெற்று, இந்த விருதினை ஏர் ஆசியா தட்டிச் சென்றது. 

தொடர்ந்து ஐந்து வருடங்களாக இந்த விருதினை பெறுவதில் தான் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும், தனது அவ்வெற்றி அந்நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்களையும் சாரும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல்நிலை அதிகாரி டான்ஶ்ரீ டோனி ஃபெர்னாண்டஸ் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS