நட்சத்திர விழா: இன்று முதல் டிக்கெட் விற்பனை! 

சமூகம்
Typography

கோலாலம்பூர், டிச.13- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருக்கும் நட்சத்திர விழா 2018 நிகழ்ச்சியின் டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன. 

ரிம.10 தொடங்கி ரிம.30-க்குள் அந்த டிக்கெட்டுகளை, www.myticket.asia என்ற அகப்பக்கத்தில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று மை-ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் குழுவின் (MyEvents International Group) தொழில் வளர்ச்சி இயக்குநர் ஹேமா காந்தி தெரிவித்தார். 

ரஜினி-கமலைத் தவிர்த்து, இசையமைப்பாளர்கள் ஹரீஷ் ஜெயராஜ், அனிரூத் ரவிசந்திரன், ஶ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ், எஸ்.எஸ்.தாமன் மற்றும் டி.இமான் ஆகியோரும் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர். 

ஜனவரி 6-ஆம் தேதியன்று, புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பின்னணிப் பாடகர்கள், கார்த்திக், ஸ்வேதா மோகன், ரஞ்ஜித், நரேஷ் ஐயர் மற்றும் சின்மாயி ஆகியோரும் கலந்துக் கொள்வர். இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 30,000 மக்கள் வருகையளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS