ரோன் -95 பெட்ரோல் விலை இவ்வாரம் 4 காசு குறைந்தது!

சமூகம்
Typography

கோலாலம்பூர், டிசம்.13- வாராந்திர பெட்ரோல் விலை நிர்ணயத்தின்படி இவ்வாரத்திற்கான பெட்ரோல் விலை சரிவு கண்டுள்ளது. ரோன்-95 ரகப் பெட்ரோல் விலை 4 காசு குறைந்து, லிட்டருக்கு 2 ரிங்கிட் 25 காசாக விற்கப்படும்.

அதே வேளையில் ரோன்-97 ரகப் பெட்ரோல் விலை 5 காசு குறைந்துள்ளது. தற்போது ரோன்-97 பெட்ரோல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 52 காசாக விற்கப்படும்.

மேலும், டீசல் விலை ஒரு காசு குறைந்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 20 காசாக விற்கப்படும். இன்று நள்ளிரவு தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரைக்கும் இந்தப் புதிய விலை அமலில் இருக்கும். 

BLOG COMMENTS POWERED BY DISQUS