பதின்ம வயது மாணவர்களுக்கு 'சுகம் சமர்பணம்' விடுமுறை கால முகாம்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், டிச.14- பள்ளி விடுமுறை காலத்தை பள்ளி மாணவர்கள் நல்ல முறையில் களித்திடவும் கலாச்சார பண்புகளைக் கற்கும் வகையிலும் சுகம் கர்நாட்டிகா மன்றம் பதின்ம வயதினருக்கு சிறப்பு முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு சுகம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் அறவாறியம் தொடங்கப்பட்டது. இந்தியர்களின் பாரம்பரிய கலைகளைச் சொல்லி தருவதோடு பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு இந்த மன்றம் செயலாற்றி வருகிறது.

இவ்வகையில், பள்ளி விடுமுறை காலத்தில் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவர்கள் இரு வார காலத்தில் கலாச்சாரம் சார்ந்த விசயங்களை கற்றுக் கொள்ளும் வகையில் சுகம் சமர்பணம் எனும் முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் பலவகையான நன்னெறி சார்ந்த விசயங்கள் போதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் கற்றதை ஒப்புவிக்கும் நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மாஸ் ஏர்லைன்ஸ் பயிற்சி அகாடமியில் மாலை 4 மணி முதல் நடக்கவுள்ளதாக அதன் தகவல் இயக்குனர் சுமித்ரா ஜெயசீலன் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS