எடையைக் கூட்டி டுரியான் விற்றனர்; ஏமாற்றிய 19 கடைக்காரர்களுக்கு சம்மன்!

சமூகம்
Typography

சிரம்பான், ஜன.12- டுரியான் நிறுவை இயந்திரத்தில் அதிக எடைக் காட்டுவதற்காக காந்தங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றிய சிரம்பானைச் சேர்ந்த 19 கடைக்காரர்களுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த திங்கள் முதல் உள்நாட்டு வாணிப அமைச்சு நடத்திய 'ஓப்ஸ் டுரீ' நடவடிக்கையின்போது பல கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மந்தின், செனவாங், ஜாலான் பந்தாய்- ஜெலுபு மற்றும் கோல குளவாங் ஆகிய பகுதிகளில் மொத்தம் 46 டுரியான் விற்கும் கடைகளில் இந்த சோதனை செய்யப்பட்டதாக அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ஏமாற்று நடவடிக்கையில் ஈடுப்பட்ட கடைக்காரர்களுக்கு சம்மன் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS