போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த  நடிகர் 4 நாள் தடுத்து வைப்பு!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.12-கோத்தா டமான்சாரா போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரரைக் கன்னத்தில் அறைந்ததோடு பொதுமக்களில் ஒருவரைக் காலால் எட்டி உதைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நடிகர் டத்தோ பாரிட் காமீலை நான்கு நாள்களுக்கு தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டது.

இன்று காலை அவர் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு  போலீஸ் காவல் உடையில் கொண்டு வரப்பட்டார். குற்றவியல் சட்டத்தின் 117 ஆவது பிரிவின் கீழ் அவரை நான்கு நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஷாக்கி அஷ்ராப் ஷுபிர் உத்தரவிட்டார்.

தன்னுடைய கைத் தொலைபேசியில் வந்த ஒரு தகவலை படித்து விட்டு ஆவேசமடைந்த நடிகர் பாரிட், போலீஸ் நிலையத்தில் தன்னிடம்  சம்பவம் குறித்து பதிவு செய்து கொண்டிருந்த போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்ததோடு, அருகிலிருந்த ஒருவரைக் காலால் எத்தியதாக கூறப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS