மனிதக் கடத்தலை விசாரிக்க   கிள்ளானில் சிறப்பு நீதிமன்றம்!

சமூகம்
Typography

புத்ராஜெயா, ஜன.12- மனிதக் கடத்தல் பிரச்சனைகளை விசாரிக்க இவ்வாண்டு சிறப்பு நீதிமன்றம் ஒன்று கிள்ளானில் அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி துன் முகம்மட் ராவ்ஸ் ஷரிப் தெரிவித்தார்.

இந்த முன்னோடித் திட்டம் மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டுவிடும். பின்னர் ஈப்போ, மலாக்கா, கோத்தா கினாபாலு, மூவார், மற்றும் பாலிக் பூலாவ் ஆகிய இடங்களிலும் அமைக்கப்படும்  என்று அவர் சொன்னார்.

மனிதக் கடத்தல் சம்பவங்கள் அண்மைய காலத்தில் அதிகரித்திருப்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.  எனவே இந்த வழக்குகளை விசாரிக்கவும் முடிவு செய்யவும் செசன்ஸ் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமாகிறது என அவர் கூறினார்.

வழக்கமான நீதிமன்றங்களைக் காட்டிலும் இத்தகைய சிறப்பு நீதிமன்றங்கள் வழக்குகளைத் துரிதமாக முடிக்க முடியும் என்று அனுபவ ரீதியில் கண்டறியப் பட்டிருப்பதால் இந்தச் சிறப்பு நீதிமன்றம் தேவைப்படுகிறது என்று துன் ராவ்ஸ் ஷரிப் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS