நாடு தழுவிய அளவில் குளிர் அதிகரிப்பு! கேமரன் மலை இன்னொரு ஐரோப்பா!

சமூகம்
Typography

கேமரன் மலை, ஜன.14- நாடு தழுவிய நிலையில் இடைவிடாத தூறல் காரணமாக மலேசியாவின் பல்வேறு இடங்கள் மிகக் குளிர்ச்சியான நிலையை எட்டியிருக்கும் நிலையில், கேமரன் மலை இன்னொரு  ஐரோப்பாவாக காட்சி தருகிறது. 

ஐரோப்பாவின் பனிக் காலத்தை எடுத்துக் காட்டும் விதமாக குளிர்ந்த மேக மூட்டங்களால் கேமரன் மலை சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வார இறுதி நாள்களில் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ளும் மக்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இது கூடுதலான புதிய அனுபவத்தை அளித்திருக்கிறது.

கேமரன்மலையில் வெப்பநிலை 14 முதல் 16 டிகிரி செல்சியஸிற்கு இடைப்பட்ட நிலையில் இருந்து வருவதால் சுற்றுப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் குளிர்கால ஆடைகளை அணிந்த வண்ணம் காணப்படுகின்றனர்.

அதேவேளையில், கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் கடந்த இரு தினங்களாக குளிர் மிகுந்தே காணப்படுகிறது. இப்பகுதியில் வெப்பம்  21 டிகிரி செல்சியஸிற்கும் குறைந்து காணப்பட்டது.  வடகிழக்குப் பருவமழைக் காரணமாக இந்தக் குளிர் நிலை அதிகரித்து இருக்கிறது என்று வானிலைத் துறை தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS