'பள்ளிகளில் நன்னெறிப் பாடம்  மாற்றப்பட  வேண்டும்!' -பேராசிரியர் சுந்தரா

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன. 14-  பள்ளிகளில் நன்னெறி பாடத்திற்குப் பதிலாக மனித சமூக நன்னடத்தைகள் தொடர்பான அம்சங்களைப் பாடமாக வைக்க வேண்டும் என்று குற்றவியல் துறை நிபுணரான இணைப் பேராசிரியர் பி.சுந்தர மூர்த்தி தெரிவித்தார்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு இடையே நிலவும் சமூகச்  சீர்கேடுகளைத் தடுப்பதற்கு இது சிறந்த வழியாக அமையும் என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவர் தெரிவித்தார்.

இணையம் சார்ந்த பாலியல் பிரச்சனைகள், போதைப் பொருள், மதுப் பழக்கம், ஆரோக்கியக் குறைவு, பகடிவதை மற்றும் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் ஆகியவற்றை சிறந்த  வழிமுறைகளில் கட்டுப்படுத்த இந்தப் புதிய பாடத்திட்டம் ஆக்கரமானதாக இருக்கும் என்றார் அவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பேபாறிவியல் பல்லகலைக் கழகம் நடத்திய ஆய்வின் வழி இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.  மனோநிலைப் பிரச்சனை உள்பட நன்னடத்தைகள் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளையும் இந்த மனித சமூக நடத்தை மீதான பாடத்திட்டம் உள்ளடக்கியதாக இருக்கும்படி செய்யவேண்டும் என்றார் அவர்.

 கல்வித்துறையில் ஒன்பது வயதில் தொடங்கி, ஐந்தாம் படிவத்தை ப் பூர்த்தி செய்யும் வரையில் இந்தப் பாடம் சொல்லிக் கொடுக்கப்படுவதை தொடர வேண்டும் என்று சுந்தர மூர்த்தி சொன்னார்.

பாலியல் தொடர்பான கல்வி முக்கியமான அம்சமாக அமைதல்வேண்டும். ஆபாசத் வலைத்தளங்கள், பள்ளிப் பிள்ளைகள் எட்டுவதற்கு மிக எளிதாக அமைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இது அவசியமாகிறது. இத்தகைய ஆபாசத் தளங்கள பலவற்றை அரசாங்கம் தடை செய்துள்ள போதிலும், இன்னும் பல தளங்கள் எட்டும் வகையிலேயே இருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS