பஸ்நிறுத்தத்தில்  'டூடோங்' அணியாததால்  பெண்ணை கன்னத்தில் அறைந்தவர் கைது!

சமூகம்
Typography

புக்கிட் மெர்டாஜாம், ஜன.22- 'டூடோங்' அணியாத காரணத்திற்காக, பஸ் நிறுத்தத்தில்  22 வயதுடைய இளம் முஸ்லிம் பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக நம்பப்படும் நபரை பினாங்கு போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்கு தாமான் பெர்வீராவிலுள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் சம்பந்தப்பட்ட நபர், பஸ்சுக்கு காத்திருந்த பெண்களை, டூடோங் அணியாதது குறித்து மிரட்டியதோடு ஒரு பெண்ணின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே கன்னத்தில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்தப் பெண், இந்தோனிசியாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தப் பெண், இது குறித்து நேற்றுத்தான் போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து புலன் விசாரணையில் ஈடுபட்ட பினாங்கு போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார் என்று செப்பராங் பிறை தெங்கா போலீஸ் படைத்தலைவர் நிக் ரோஸ் அஸ்லான் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS