சிறுமி மானபங்கம்; காமுகன் 7 நாட்களுக்குத் தடுத்து வைப்பு! 

சமூகம்
Typography

சுங்கைப் பட்டாணி, ஜன.23- கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கேளிக்கைச் சந்தை ஒன்றில், சிறுமி ஒருவரை தன் மடி மீது உட்கார வைத்து மானபங்கம் செய்த ஆடவன், நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டு ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். 

அந்தச் சிறுமியை அந்த ஆடவன் மானபங்கம் செய்யும் வீடியோ காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவனை போலீசார் வலைவீசித் தேடி, நேற்று பிற்பகல் 3.10 மணிக்கு கைது செய்தனர். 

2017-ஆம் ஆண்டின் சிறார்களின் சட்டத்தின் சிறார்கள் மீது பாலியல் கொடுமை 14 (a) பிரிவின் கீழ், அந்தச் சம்பவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அந்த ஆடவனின் நெற்றிப் பகுதியில் ஆறு தையல்கள் போடப்பட்டிருந்தன. 

நேற்று பிற்பகல் கோலா மூடா காவல் நிலையத்திற்கு அந்த ஆடவன் கொண்டு வரப்பட்ட போது, அவனை சிலர் தாக்கியுள்ளதற்கான அடையாளம் அவனின் முகத்திலும், தலைப்பகுதியிலும் தென்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். அந்த ஆடவனை தாக்கியவர்கள் யார் என்பதை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. 

BLOG COMMENTS POWERED BY DISQUS