சிறார் பாலியல் வன்கொடுமை; இல்லப் பராமரிப்பாளரின் காவல் நீட்டிப்பு!   

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.23- இங்கு அம்பாங் ஜெயாவிலுள்ள சிறார் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதன் பேரில் கைதாகிய ஆடவர் ஒருவரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அவ்வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த இல்லத்தின் பராமரிப்பாளரான அந்த ஆடவர் மற்றும் அவரின் மனைவியின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் ஹம்ஸா அலியாஸ் கூறினார். 

"அந்த ஆடவர் ஜனவரி மாதம் 29-ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்படுவார். அவரின் மனைவி ஜனவரி மாதம் 28-ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்படுவார்" என்று ஹம்ஸா சொன்னார். 

அந்த இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை கொடுமைப்படுத்தி, அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக அந்த ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 4-ஆம் தேதியன்று, அந்த இல்லத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமியை கற்பழித்ததன் பேரில் அந்த ஆடவரும், அவரின் கொடூரங்களுக்கு உடந்தையாக இருந்தமைக்காக அவரின் மனைவியையும் போலீசார் கைது செய்தனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS