பத்துமலை கோயிலில் கடும் மழைக்காற்று! தைப்பூசக் கடைகளின் கூரைகள் சரிந்தன! -(video)

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.23- பத்துமலை வளாகத்தில் நேற்று பிற்பகலில் கடும் மழையுடன் கூடிய காற்று வீசியதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த டைகளின் கூரைகள் பறந்தன. கூடாரங்கள் சரிந்தன. இதனால் சிறிது நேரம் அங்கு கடும் பரபரப்பு நிலவியது.

எதிர்வரும் 31ஆம் தேதி பத்துமலையில் தைப்பூச விழா வெகு சிறப்பாக கொண்டாடப் படவிருக்கிறது. தைப்பூச விழாவுக்கான கடைகள் மிகத் துரிதமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று பிற்பகலில் கடுமையான மழை பெய்யத்தொடங்கியதோடு பலத்த காற்றும் வீசியது. இந்தக் காற்றில், அங்கு அமைக்கப்பட்டு வந்த தைப்பூசக் கடைகள் சிலவற்றின் கூடாரங்கள் சாய்ந்தன.  மேற்கூரைகளும் சரிந்து விழுந்தன. இதனால் கடைக்காரர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாயினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS