4 பெட்டி மோனோரயில் சேவை தற்காலிக நிறுத்தம்! 

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஜன.24- ரேபிட் கே.எல்-யின் நான்கு பெட்டி மோனோரயில்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், அவற்றின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

"அந்த ரயில்களின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு, அவற்றின் மீது சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று ரேபில் கே.எல்-யின் தலைமைச் செயல் அதிகாரி முகமட் அரிஃபீன் இட்ரீஸ் கூறினார். 

இதுநாள் வரை, மோனோரயில்களை பயன்படுத்தி வந்த பயணிகளுக்கு எவ்வித சிரமமும் நேர்ந்துவிடாமலிருக்கும் பொருட்டு, மோனோரயில் பாதைகளுக்கான பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்துத் தரப்பட்டுள்ளதாக முகமட் அரிஃபீன் மேலும் கூறினார். 

"அந்தப் பயணச் சேவைக்கான கட்டணம், 1 ரிங்கிட் மட்டுமே. 15 நிமிடங்களில் மக்கள் தங்களின் இலக்குகளை அடைந்து விடலாம் என்று கணித்துள்ளோம். ஆனால், போக்குவரத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் சொன்னார். 

ரேபிட் கே.எல்லின் இரண்டு பெட்டி மோனோரயில்களில் சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தத் தடங்களுக்காக தாங்கள் வருந்துவதாகவும் ரேபிட் கே.எல் நிறுவனம் தெரிவித்துக் கொண்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS