குளியலறையில் வழுக்கி விழுந்து பாயா புசார் எம்.பி.  மரணம்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.13- பாயா புசார் தொகுதி எம்பியான டத்தோஶ்ரீ அப்துல் மனான்,  தாமான் மிலாவதியிலுள்ள தம்முடைய வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்ததைத் தொடர்ந்து நேற்று காலமானார்.

பாயா புசார் அம்னோ டிவிசனின் தலைவருமான 70 வயதுடைய அப்துல் மனானின் மறைவுச் செய்தியை அவருடைய சகோதரர் டத்தோஶ்ரீ முகம்மட் சுஃபியான் அறிவித்தார்.

கடந்த 1986ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரையில் அப்துல் மனான், பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் தனிப்பட்ட சிறப்புச் செயலாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் மலேசியாவின் அறிவார்ந்த சொத்துடமைக் கழகத்தின் தலைவராகவும் அவர் இருந்து வந்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS