மேடான் பணிப்பெண் சித்ரவதை மரணம்:  60 வயது பெண்மணி கைது!

சமூகம்
Typography

புக்கிட் மெர்டாஜாம், பிப்.13- இங்கு தாமான் கோத்தா பெர்மாயில் உள்ள வீட்டில் வேலை செய்த  இந்தோனிசிய பணிப்பெண் ஒருவர் சித்ரவதைக்கு உள்ளாகி மாண்டதைத் தொடர்ந்து புலன் விசாரணைக்கு உதவக்கூடிய  மற்றொரு பெண்மணியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜார்ஜ்டவுன், ஜாலான் கீரீன் ஹாலிலுள்ள கட்டடத்தின் முன்னால் 60 வயதுடைய அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ரோஸ் தெரிவித்தார்.

 மேடானைச் சேர்ந்த 28 வயதுடைய பணிப் பெண்ணான அடெலினா என்பவர் முதலாளிகளால் கொடுமைப் படுத்தப்பட்டதாக போலீஸ் புகார் கிடைத்தைத்தொடர்ந்து  வரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த மறுநாள் அவர் உயிர் நீத்தார்.

இதனை அடுத்து அந்தப் பணிப்பெண்ணின் முதலாளிகல் எனக் கருதப்படும் ஒரு சகோதர, சகோதரியான இருவரை போலீசார் கைது செய்தனர். அதேவேளையில் அந்த வீட்டில் இருந்த இவர்களின் தாயாரான 60 வயதுடைய பெண்மணியை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் காணாமல் போய்விட்டார்.

போலீசாரால் கைது செய்யப்பட நேரும் என்பதால் அந்தப் பெண்மணியை அவர்களது பிள்ளைகள் மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அந்தப் பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தில் இந்தப் பெண்மணிக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS