தீப் பற்றி எரிகிறது இபிஎப் கட்டடம்! மக்கள் அதிர்ச்சி! கட்டுப்படுத்த போராட்டம்!

சமூகம்
Typography

பெட்டாலிங் ஜெயா, பிப்.13- பெட்டாலிங் ஜெயாவில் ஜாலான் காசிங்கிலுள்ள தொழிலாளர் சேம நிதிக் கட்டடம் ( இ.பி.எப்) தீப் பற்றி எரிகிறது. கரும் புகையைக் கக்கிய வண்ணம் குபு குபுவென பற்றி எரியும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

இந்தத் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுவரையில் உயிருடற்சேதம் எதுவும் இல்லை என்று தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

தீப்பற்றி எரியும் இ.பி.எப்கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து சிதைந்த சில பகுதிகள் கீழே விழுந்த வண்ணம் உள்ளன. பெடரல் நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் கடுமையானது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS