துணை முதல்வர் இராமசாமியிடம் லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை!

சமூகம்
Typography

ஜார்ஜ்டவுன், பிப்.13- பினாங்கின் கடலடி சுரங்கப் பாதை திட்டம் தொடர்பில் நாளை பினாங்கின் 2ஆவது  துணை முதல்வர் டாக்டர் இராமசாமியிடம் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்தவிருக்கிறது.

நாளைக் காலையில் ஜாலான் சுல்தான் அகமட் ஷாவிலுள்ள அலுவலகத்தில் எம்ஏசிசி.யின் அதிகாரிகளைத் தாம் சந்திக்க விருப்பதாக டாக்டர் இராமசாமி சொன்னார்.

திங்கள் கிழமை காலையில் தம்முடைய அலுவலகத்திற்கு வந்திருந்த எம்ஏசிசி அதிகாரிகள் 2012 ஆம் ஆண்டு முதல்  2014ஆம் ஆண்டு வரைக்குமான எனது நிகழ்வுக் குறிப்புகள் எடுத்துச் சென்று விட்டனர். எனினும் கோப்புகள் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS