கொடுமைக் கொலை: 60 வயது மாதுவை 7 நாள்கள் காவலில் வைக்க உத்தரவு!

சமூகம்
Typography

புக்கிட் மெர்டாஜாம், பிப்.13- இங்கு தாமான் கோத்தா பெர்மாயில்  வேலை செய்த  இந்தோனிசிய பணிப்பெண் ஒருவர் சித்ரவதைக்கு உள்ளாகி இறந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 60 வயது மாது  7 நாள் தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டார்.

புலன் விசாரணைக்கு வசதியாக இந்த மாதுவை 7 நாள் காவலில் வைக்க போலீசார் நீதிமன்றத்தின் அனுமதியை இன்று பெற்றனர்.

தொடர்ந்து புலன் விசாரணைக்கு உதவக்கூடிய  மற்றொரு பெண்மணியைப் போலீசார் கைது செய்துள்ளனர். காலை 9.35 மணியளவில் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட அந்த மாது வினால் போலீசாரின் வாகனத்தில் இருந்து இறங்கமுடியாமல் தடுமாறிய போது அவரை கைத்தாங்கலாக போலீசார் இறக்கி விட்டனர்.

நீதிமன்ற பதிவாளர் நோர்  ஹாபியா, எதிர்வரும் 19ஆம் தேதிவரை அவரைக்காவலில் வைக்க அனுமதி வழங்கினார்.  குற்றாவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலை என்ற அடிப்படையில் இவர் விசாரிக்கப்படவிருக்கிறார்.

மேடானைச் சேர்ந்த 28 வயதுடைய பணிப் பெண்ணான அடெலினா என்பவர் முதலாளிகளால் கொடுமைப் படுத்தப்பட்டதாக போலீஸ் புகார் கிடைத்தைத் தொடர்ந்து  அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த மறுநாள்  உயிர் நீத்தார்.

இதனை அடுத்து அந்தப் பணிப்பெண்ணின் முதலாளிகள் எனக் கருதப்படும் ஒரு சகோதர, சகோதரியான இருவரை போலீசார் கைது செய்தனர். அதேவேளையில் இவர்களின் தாயாரான 60 வயதுடைய மாதுவையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS