பள்ளித் திடலில் புல் வெட்டும் இயந்திர கத்தி தெறித்தது! ஒரு மாணவி பலி! 2 பேர் படுகாயம்!

சமூகம்
Typography

தம்பின், பிப்.13- கிம்மாஸிலுள்ள் தேசிய இடைநிலைப்பள்ளித் திடலில் புல்வெட்டும் வாகனம் பணியில் ஈடுபட்டிருந்த போது அதிலிருந்த  'பிளேடு' எனப்படும் வெட்டுக் கத்தி கழன்று அருகிலிருந்த பள்ளிப் பிள்ளைகள் மீது பாய்ந்ததில் ஒரு மாணவி பரிதாபகரமாக மாண்டார். மேலும் இரு மாணவிகள் கடுமையாகக் காயமடைந்தனர்.

காலை 10.30 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது. 14 வயதுடைய 2ஆம் படிவ மாணவியான நூர் அஃபினி ரோஸ்லான் என்ற மாணவியின் தலைக்குப் பின்புறத்தில் கடுமையான வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் நீத்தார்.

மேலும் நூர் அஃபினின் தோழிகளான அப்துல்லா ஹஸ்லான் (வயது 14) மற்றும் முகம்மட் ஃபார்ஹான் ரேஷா ( வயது13) ஆகிய இருவரும் இந்த விபத்தில் படுகாயத்திற்கு உள்ளாயினர்.

இந்தப் புல்வெட்டு இயந்திரம், டிராக்டர் மூலம் இழுத்துச் செல்லப்பட்டு, திடலில் புல் வெட்டும் பணி நடந்துக் கொண்டிருந்த போது அதிலிருந்த பிளேடு  கத்தி கழன்று தெறித்ததாக தெரிய வந்துள்ளது.  

அப்போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக நம்பப்படும் அந்த 3 மாணவிகள் மீது அந்தப் பிளேடு பட்ட போது அவர்கள் சுருண்டு விழுந்தனர்.  இவர்களில் நூர் அஃபினி அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து போலீசார் புலன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS