இபிஎப் கட்டடத்தில் தீ!  சேமிப்பு விபரங்கள் பாதுகாப்பாக உள்ளன! 

சமூகம்
Typography

பெட்டாலிங் ஜெயா, பிப்.13- இங்கு ஜாலான் காசிங்கிலுள்ள இபிஎப் தொழிலாளர் சேம நிதிக் கட்டடத்தில் இன்று காலையில்  கோரத் தீவிபத்து நடந்துள்ள போதிலும்  இபிஎப் சந்தாதாரர்களின் சேமிப்பு மற்றும் அவர்கள் பற்றிய தகவல் தரவுகளும் பாதுகாப்பாக உள்ளன என்று அதன் அறிக்கை ஒன்று கூறியது.

எந்த வகையிலும் தகவல் விபரப் பதிவுகள் மற்றும் உறுப்பினர்கள் சேமிப்பு ஆகியவற்றில் எத்தகைய கவனக் குறைவும் இல்லை என்பது குறித்து உறுப்பினர்களுக்கு உறுதி கூறிக் கொள்வதாக அது தெரிவித்தது.

இந்தத் தீ அக்கட்டடத்தின் இதர பகுதிகளுக்கு தீப் பரவிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதில் தீயணைப்புத் துறையும் இபிஎப்.பின் இடர் நிவாரணக் குழுவும்  ஒருங்கிணைந்து செயல்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கட்டடத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புதான் எங்களின் முதன்மை அக்கறையைப் பெற்றிருந்தன.  முற்றாக அவர்கள் கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அடுத்த அறிவிப்பு வரும் வரையில் கட்டடம் மூடப்பட்டிருக்கும் அது தெரிவித்தது.

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS