அந்த செக்ஸ் வீடியோவில் இருக்கும் ஆள் யார்?  "அவன் நானில்லை" -லீ சோங் வெய்..!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.13- தற்போது பரபரப்பாக பரவலாகிக் கொண்டிருக்கும் அந்த செக்ஸ் வீடியோவில் இருக்கும் அந்த ஆள் நானில்லை என்று பிரபல பேட்மிண்டன் வீரர் டத்தோ லீ சோங் வெய் அறிவித்துள்ளார்.

'அவன் நானில்லை' என்று அவர் இன்று திட்டவட்டமாகக் கூறினார். இது குறித்து நான் அதிர்ச்சி அடைய எதுவுமில்லை. மேலும் எனது பெயரைத் தற்காத்துக் கொள்ளப் போலீஸ் புகார் ஒன்றைச் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்" என்று அவர் சொன்னார்.

"விரைவில் என்னுடைய வரலாற்றைத் தாங்கிய திரைப்படம் வெளிவரவிருக்கிறது. எனவே, என் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதற்கான சில வழிகளில் இதுவும் ஒன்று" என லீ சோங் வெய் வர்ணித்தார்.

"நான் போலீசில் புகார் செய்யப் போகிறேன். என் மீதான களங்கத்தைத் துடைக்கவேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அயோக்கினை போலீசார் கைது செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார் அவர்.

"உயர்ந்த நிலையில் இருக்கும் போது நமது பெயரைக் கெடுக்க சிலர் முயற்சிப்பார்கள். இது எனக்கு வழக்கமான ஒன்றுதான். இது என்னை பாதிக்க நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS