இபிஎப் பணம்: மக்கள் மீட்க முடியாதா? அதெல்லாம் வெறும் பொய்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.13- அடுத்த 6 மாதங்களுக்கு தொழிலாளர் சேம நிதியான இபிஎப்.பிலிருந்து அதன் உறுப்பினர்கள் பணத்தை மீட்க முடியாது என்று வாட்ஸ்-அப்பில் வெளியாகியுள்ல செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று இபிஎப் விடுத்துள்ள அறிக்கை கூறியது.

அவ்வாறு பணத்தை மீட்க விரும்பும் தொழிலாளர்கள் அது குறித்து அருகிலுள்ள இபிஎம்  கிளை அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது நேரில் வந்து பண மீட்பைச் செய்யலாம் என்று அது தெரிவித்தது.

பெட்டாலின் ஜெயாவில் ஜாலான் காசிங்கிலுள்ள இபிஎப் அலுவலகத்தில் மர்மமான முறையில் இன்று காலை தீப்பற்றியதால் அதனை மறுசீரமைக்கும் பணி செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே,  இபிஎப்.பில் பணம் மீட்கும் முறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாது ஒரு செய்தி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.

இதனை மறுத்த இபிஎப் வாரியம், இது குறித்து அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் 03-8922 6000 என்ற  இபிஎப் நிர்வாக மைய தொலைபேசி எண்ணுடன் அல்லது myEPF website என்ற இணையப் பக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS