நாடு தழுவிய அளவில் ஆலயங்களில் மகா சிவராத்திரி விழா! -(Video)

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.14- நாடு தழுவிய அளவில் மலேசியாவில் மகா சிவராத்திரி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள சிவன் ஆலயங்கள் மிக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு மாலை முதல் அதிகாலை வரை சிறப்பு  அபிஷேகங்களுடன் சிவ பூஜைகள் இடம்பெற்றன.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசியன்று மகா சிவ ராத்திரி விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று, சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில், பக்தர்கள் ஆலயங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று சிவப்பெரு மானை வழிப்பட்டு சிவ தரிசனம் பெற்றனர்.

ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கண்விழித்து சிவ பெருமானை வழிப்படும் வகையில், விடிய விடிய தேவாரம், திருவாசகம், சிவபுராணம்  பாடப்பட்டு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 

மகா சிவராத்திரியை முன்னிட்டு மலேசியா முழுவதும் உள்ள சிவன் ஆலயங்கள் மட்டுமின்றி அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இவ்வருட சிவராத்திரி வார நாளில் இடம்பெற்றதால், பக்தர்கள் வேலை முடிந்து, ஆலயங்களுக்குச் சென்று விடிய விடிய வழிபாடுகளில் கலந்துக் கொண்டனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS