போலி செக்ஸ் வீடியோ: லீ சோங் வெய்யிடம் வாக்குமூலம்!  போலீஸ் விசாரணை ஆரம்பம்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப் 14- செக்ஸ் வீடியோவில் இருக்கும் ஆள் நானல்ல என்று தேசிய பேட்மிண்டன் வீரர் டத்தோ லீ சோங் வெய், போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து போலீசார் இது குறித்து தீவிர புலன் விசாரணையை தொடக்கியுள்ளனர்.

ஆபாச பட வீடியோ ஒன்றில் லீ சோங் வெய் இடம் பெற்றிருக்கிறார் என சமூக ஊடகங்களில் தகவல் பரவலானதைத் தொடர்ந்து, அதனை அவர் மறுத்தார். மேலும், தம்மைக் களங்கப்படுத்த சிலர் இத்தகைய போலி வீடியோவை பரவவிட்டிருப்பதாக அவர் போலீசில் புகார் செய்தார்.

இதனை அடுத்து, இது குறித்து விசாரணையை தமது இலாகா தீவிரப்படுத்தி இருப்பதாக வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனரான டத்தோஶ்ரீ அமார் சிங் தெரிவித்தார்.

1998ஆம் ஆண்டின் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தில் கீழ் அவதூறுக் குற்றச்சாட்டின் பேரில் லீ சோங் வெய்யின் புகார் குறித்து தாங்கள் விசாரணையைத் தொடங்கி இருப்பதாக அவர் சொன்னார். 

லீ சோங் வெய்யிடமிருந்து தாங்கள் வாக்கு மூலத்தைப் பதிவு செய்வதாகவும் செய்தியாளர்களிடம் அமார் சிங் தெரிவித்தார்.

தற்போது பரவலாகி வரும் அந்த ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று  லீ சோங் வெய் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். 

விரைவில் தன்னுடைய வரலாறைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளதால், சிலர் வேண்டும் என்றே தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்று இருப்பதாக லீ சோங் வெய் சொன்னார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS