டத்தோ எம்.பாண்டியன் - டத்தின் கௌரியை போலீஸ் தேடுகிறது- டத்தோஶ்ரீ அமார் சிங்

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.14- அன்னிய செலாவணி முதலீட்டு மோசடித் திட்டக் கும்பலுடன்  தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் டத்தோ பாண்டியன் மருதமுத்து (வயது 55) மற்றும் அவருடைய மனைவி டத்தின் கௌரி பாஸ்குனி (வயது 56) என்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்று வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோஶ்ரீ அமார் சிங் தெரிவித்தார்.

மோசடித் திட்டம் தொடர்பில் போலீசார் அதிரடிச் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கிய வேளையில் இவர்கள் இருவரும் அண்டை நாடு ஒன்றுக்கு தப்பியோடி விட்டதாக நம்பப் படுவதாக அவர் சொன்னார்.

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால், பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்யலாம் என்றார் அவர்.

இதனிடையே அன்னிய செலாவணி சம்பந்தப்பட்ட மோசடித் திட்டம் ஒன்றில் சம்பந்தப் பட்டுள்ளதாக நம்பப்படும் மூன்று டத்தோக்களை வர்த்தகக் குற்றத் தடுப்புப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

சுமார்35 வயதுக்கும் 49 வயதுக்கும் உட்பட்ட அந்த மூவர் கைது செய்யப்பட்டதோடு, 13 ஆடம்பரக் கார்கள், மூன்று ‘சூப்பர் பைக்’ மோட்டார் சைக்கிள்கள், 10 தங்கக் கட்டிகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.

சுமார் 100 கோடி ரிங்கிட் சம்பந்தப்பட்ட இந்த மோசடிகள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக 116 போலீஸ் புகார்கள் உள்ளன. இவர்களுடன் சம்பந்தப்பட்ட இதர 17 பேரின் வங்கிக் கணக்குகள் உள்பட 38 வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தங்களின் முதலீட்டுத் திட்டங்களை இணைய  விளம்பரங்கள் மூலம்  பலரை தங்கள் பக்கம் இவர்கள் ஈர்த்துள்ளனர். இந்தச் சந்தேகப் பேர்வழிகள் 1959ஆம் ஆண்டின் குற்றத் தடுப்புச் சட்டமான ‘பொகா’வின் கைது செய்ய பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS